சவுதி: சிறப்பாக நடை பெற்ற தமிழ் பயான் நிகழ்ச்சி - sonakar.com

Post Top Ad

Monday, 7 May 2018

சவுதி: சிறப்பாக நடை பெற்ற தமிழ் பயான் நிகழ்ச்சி


சவுதி அரேபிய, அல் கப்ஜி நகரில் கடந்த வெள்ளிக் கிழமை 4-5-2018 அன்று தமிழ உலகத்தின் மூத்த ஆலிம்களுல் ஒருவரான அஷ்ஷெய்க் அப்துல் வதூத் ஜிப்ரி அவர்கள் கலந்து சிறப்பித்த சிறப்பு பயான நிகழ்ச்சி சகோதரர் பயாஸ் அவர்களின் இல்லாத்தில் (ஷமாலிய்யா) மிகச் சிறப்பாக நடை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஜும்ஆ பிரசங்கத்தின் தமிழாக்கத்தை அல் கப்ஜி தஃவா நிலைய பிரச்சாரகர் அஷ்ஷெய்க் றிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்கள் நடாத்தி வைத்தார். இரண்டாவது நிகழ்வாக நிகழ்சியின் பிரதான பேச்சாளர் இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துல் வதூத் ஜிப்ரி அவர்களின் ரமழானை வரவேற்போம் என்ற சிறப்புரை இடம் பெற்றது.. 

அல் கப்ஜி தமிழ் தஃவா குழுமம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அதிகாமான ஆண், பெண்கள் (கிட்டத்தட்ட 75 பேர்) கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

நடாத்தப்பட்ட விஷேட பயான் நிகழ்சியில் இருந்து கேள்விகள் கேட்க்கப்பட்டு சரியான விடையளித்தவர்களுக்கான பரிசில்கள் நிகழ்சி இறுதியில் வழங்கப்பட்டன.

பயான் நிகழ்சி முடிவில் தமிழ் பேசும் சகோதரர் ஒருவர் தனது வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மிகச் சிறப்பான நிகழ்வு கூடியிருந்தவர்களை பெரும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது. 

இந்த நிகழ்சியை ஏற்பாடு செய்வதற்கு பொருளாதார ரீதியாக, உடல் ரீதியாக உதவி செய்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் அல்லாஹ் அருள் கிடைக்க வேண்டும். மேலும் பயான் நிகழ்சியின் கடைசி வரை கலந்து கொண்டு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

-Riskhan Musteen

No comments:

Post a Comment