பிக்பொக்கற்: வெட்கத்தில் சொல்லாமல் விட்ட அரசியல்வாதி! - sonakar.com

Post Top Ad

Monday, 7 May 2018

பிக்பொக்கற்: வெட்கத்தில் சொல்லாமல் விட்ட அரசியல்வாதி!


சினிமா கலைஞர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் இறுதி அஞ்சலி நிகழ்வின் போது இந்திய அரசால் வழங்கப்பட்ட விருது திருடப்பட்டிருந்ததன் பின்னணியில் ஐந்து சந்தேக நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபர்கள் பலே திருடர்கள் எனவும் பிரபலங்களின் மரண வீடுகளுக்குச் சென்று பெறுமதியான பொருட்களைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அன்றைய தினம், விருதுக்கு மேலதிகமாக அங்கிருந்து ஐ-போன் ஒன்றையும் திருடியுள்ளதுடன் அஞ்சலி செலுத்த வந்த அரசியல் வாதியொருவரின் பணப் பர்சையும் திருடிச் சென்றுள்ளனர். எனினும் குறித்த அரசியல்வாதி  இது குறித்து முறைப்பாடு எதுவும் செய்யவில்லையெனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும், பல பிரபலங்களின் மரண சடங்குகளின் போதும் அஞ்சலி நிகழ்வுகளின் போதும் இக்குழு திருட்டு நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளதுடன் இம்முறை சிசிடிவி  பதிவு மூலம் திருடர்கள் பயணித்த வாகனம் அடையாளம் காணப்பட்டதையடுத்தே சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment