பொறுத்தது போதும்; உண்மைகளை 'பேசத்' தயார்: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Thursday, 31 May 2018

பொறுத்தது போதும்; உண்மைகளை 'பேசத்' தயார்: மைத்ரி!


நல்லாட்சி அரசு என்ற ஒன்றை உருவாக்கி இதுவரை செய்து கிழித்தது என்ன என தம்மை நோக்கி ஒவ்வொருவரும் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்ற மைத்ரிபால சிறிசேன, தான் செய்தவை மற்றும் செய்ய முடியாது தவிப்பவை குறித்து பேசத் தயார் எனவும் இனியும் மறைப்பதில் பயனில்லையெனவும் தெரிவித்துள்ளார்.100 நாள் அரசுத் திட்டம் போன்ற படு முட்டாள்த்தனமான திட்டத்துக்குக் கூட தான் இணங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை நிலவியதாகவும் தெரிவிக்கின்ற அவர், இன்று மஹிந்த அரசின் ஊழல்களை விசாரித்து முடிப்பதற்கும் தானே தடையாக இருப்பதாக தெரிவிக்கப்படுவதாகவும் ஆனால் உண்மை என்னவென்பதை மக்கள் அறிய வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.

ஜனாதிபதியான பின்னர் ஜனாதிபதிக்கான வாகனம் கூட இல்லாது பழைய வாகனத்தில் செல்லும் அளவுக்கு எளிமையாகவே தான் நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கின்ற அவர், பதில் சொல்ல வேண்டியவர்கள் மௌனித்திருந்து தம் மீது தனிப்பட்ட ரீதியில் குற்றஞ்சாட்டுவதோடு அக்கால கட்டத்தில் யாரை பொது வேட்பாளராக நிறுத்தியிருந்தாலும் வென்றிருப்பார்கள் என இப்போது தெரிவிப்பதாகவும் அப்படியானால் அப்போது ஏன் ஸ்ரீலசுக செயலாளர் தேவைப்பட்டது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, இவை தொடர்பில் யாருடன் வேண்டுமானாலும் தான் பேசத் தயார் என தெரிவிக்கின்ற மைத்ரி, தன்னை நேரில் சந்தித்து பேச விரும்பும் அமைப்புகளுக்கு நேரம் ஒதுக்கவும் தயார் என தெரிவிக்கின்றமையும் தனது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அதிகாரத்தை மறந்தே தொடர்ச்சியாக பேசி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment