கண்டி வன்முறை: திலும் அமுனுகமவை விசாரணைக்கு அழைப்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 14 May 2018

கண்டி வன்முறை: திலும் அமுனுகமவை விசாரணைக்கு அழைப்பு!


கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனவிரோத வன்முறைகளின் பின்னணியில் திலும் அமுனுகம பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன லண்டன் சென்றிருந்த வேளையிலும் அங்கு முஸ்லிம்களுடனான சந்திப்பில் வைத்து திலும் மற்றும் லொஹான் ரத்வத்தை ஆகியோரே கண்டி வன்முறைகளின் பின்னணியில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது திலும் அமுனுகம நாளைய தினம் விசாரணைக்கும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment