43 பலஸ்தீன உயிர்களைப் பலியெடுத்து அமெரிக்க தூதரகம் திறப்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 14 May 2018

43 பலஸ்தீன உயிர்களைப் பலியெடுத்து அமெரிக்க தூதரகம் திறப்பு!இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 43 பலஸ்தீனர்கiளின் உயிர்களைப் பலியெடுத்து, இரண்டாயிரத்துக்கும மேற்பட்டோர் காயமுற்றுள்ள நிலையில் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஒருதலைப் பட்சமாக ஜெரூசலத்தில் தூதரகத்தைத் திறந்துள்ளது அமெரிக்கா.2014ம் ஆண்டுக்குப் பின் பாரிய தொகை பலஸ்தீனர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்ட சந்தர்ப்பம் இதுவென மத்திய கிழக்கு அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிழக்கு ஜெரூசலத்தைத் தலைநகராகக் கொண்ட பலஸ்தீன தேச உருவாக்கத்துக்கு உலக நாடுகள் ஆதரவளிக்கின்ற போதிலும் அமெரிக்கா ஜெரூசலத்தை இஸ்ரேலுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளமையும் அரபு நாடுகள் மௌனித்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment