அலோசியசின் அலுவலகத்தில் சோதனை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 May 2018

அலோசியசின் அலுவலகத்தில் சோதனை!நீதிமன்ற அனுமதி பெறப்பட்டதன் பின்னணியில் மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் கைதாகியுள்ள அர்ஜுன் அலோசியசின் பர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் அலுவலகம் இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் சோதனையிடப்பட்டுள்ளது.


மத்திய வங்கி பிணை முறி ஊடாக 11,145 மில்லியன் ரூபாவை குறித்த நிறுவனம் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை அலோசியசிடம் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றிருப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவிக்கிறார்.

இந்நிலையில், அர்ஜுன் அலோசியஸ் மற்றும் நிறுவன நிறைவேற்று அதிகார பாலிசேன ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment