மங்கள 'தெரிந்து' கொண்டு உளறுகிறார்: கோத்தா - sonakar.com

Post Top Ad

Monday, 21 May 2018

மங்கள 'தெரிந்து' கொண்டு உளறுகிறார்: கோத்தா


இலங்கையின் பொது சேவையில் பணியாற்றிய மிகப் பயங்கரமான மனிதன் கோத்தபாய ராஜபக்ச என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தமைக்குப் பதிலளித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.


தன்னைப் பற்றி மங்கள நன்கு அறிந்து வைத்திருப்பதனால் தன்னால் 'எது' முடியும் முடியாது என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும் எனவும் நிதியமைச்சராக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை விடுத்து எனக்கெதிராக பேசித் திரிகிறார் எனவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய களமிறக்கப்படக்கூடும் என நம்பிக்கை நிலவுகின்ற நிலையில் சமூக அளவிலான சந்திப்புகளையும், நிகழ்ச்சித் திட்டங்களையும் கோத்தா முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment