விஜிதபுர சர்ச்சைக்குத் தீர்வு; வீடமைப்பு அதிகாரசபை பொறுப்பேற்பு! - sonakar.com

Post Top Ad

Thursday, 10 May 2018

விஜிதபுர சர்ச்சைக்குத் தீர்வு; வீடமைப்பு அதிகாரசபை பொறுப்பேற்பு!


அநுராதபுர, விஜிதபுர, இபலோகம பகுதியில் குடியிருப்பு ஒன்றை உருவாக்கும் பொருட்டு அங்குள்ள புராதன அடையாளங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகக் கூறி கடும்போக்குவாத பௌத்த துறவிகள் அங்கு சென்று உருவாக்கிய சர்ச்சைக்குத் தீர்வு வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது வீடமைப்பு அதிகார சபை.அங்கு காணப்பெடும் 'பெலும்கல' மற்றும் ஏனைய புராதன விடயங்கள் சேதப்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும் இது சிங்கள மக்களின் உரிமைகளை அழிக்கும் செயல் எனவும் ஞானசாரவின் பொதுபல சேனா, இராவணா பலய உட்பட்ட கடும்போக்குவாத அமைப்புகள் தெரிவித்ததோடு அங்கு இனவாதம் தூண்டப்படக்கூடிய அச்சமும் நிலவியது.

எனினும், குடியிருப்பை உருவாக்க வீடமைப்பு அதிகார சபையே அங்கு துப்பரவு பணிகளை மேற்கொண்டதாகவும் அதற்கான முழுப் பொறுப்பை ஏற்பதோடு குறித்த திட்டத்தையும் கை விடுவதாகவும் சபையின் தலைவர் லக்விஜய சாகர தெரிவித்துள்ளார்.


இதேவேளை, அங்கு 'புதையல்' தோண்டியெடுக்கப்பட்டிருப்பதாகவும் ஞானசார குழு குற்றங்சாட்டியுள்ளமையும் பிரதேச சபை செயலாளராக முஸ்லிம் பெண் ஒருவரே கடமையாற்றுகின்ற நிலையில் அவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment