தேர்தல் தொடர்பில் மஹிந்த முடிவெடுப்பார்: கோத்தா! - sonakar.com

Post Top Ad

Saturday, 12 May 2018

தேர்தல் தொடர்பில் மஹிந்த முடிவெடுப்பார்: கோத்தா!


ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதா இல்லையா என்பதை மஹிந்த ராஜபக்சவே முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்ச.


மஹிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் போட்டியிட முடியாத வகையில் சட்டத்திருத்தம் அமைந்திருக்கும் நிலையில் அதற்குப் பகரமாக கோத்தபாயவை களமிறக்குவது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் பரவலாக பேசி வருகின்றனர்.

இந்நிலையிலேயே, தான் போட்டியிடுவது தொடர்பில் மஹிந்த ராஜபக்சவே முடிவெடுக்க வேண்டும் என கோத்தா தெரிவித்துள்ளார். 

எனினும், கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமை கொண்ட நபர் என்பதால் அவர் போட்டியிட முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றமையும் அண்மையில் இதனடிப்படையில் கீதா குமாரசிங்கவின் பதவி பறிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment