பசில் - கோத்தா ஒருநாளும் 'சண்டையிட்டுக் கொண்டதில்லை': மஹிந்த - sonakar.com

Post Top Ad

Monday, 14 May 2018

பசில் - கோத்தா ஒருநாளும் 'சண்டையிட்டுக் கொண்டதில்லை': மஹிந்த


கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அல்லது பசில் ராஜபக்ச என அக்கட்சி வட்டாரத்திற்குள் இரு வேறு நிலைப்பாடுகள் நிலவி வருகின்ற நிலையில் இருவருக்குள்ளும் கருத்து முரண்பாடு வலுத்து வருவதாக வெளியான தகவல்கள் எந்த உண்மையும் இல்லையென்கிறார் மஹிந்தர ராஜபக்ச.2015 ஜனாதிபதி தேர்தல் தோல்வியோடு உடனடியாகத் தன் மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறிய பசில், பின்னர் தனியாக நாடு திரும்பி சிறைவாசம் அனுபவித்துப் பிணையில் விடுதலையானதுடன் மஹிந்தவுக்காக கட்சியொன்றையும் ஆரம்பித்து நடாத்தி வருகிறார். இந்நிலையில், கோத்தபாயவுக்கே மக்கள் செல்வாக்கு இருப்பதாக பெரும்பான்மையானவர்கள் அபிப்பிராயம் வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கோத்தா - பசில் இது விவகாரத்தில் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்துள்ள மஹிந்த, தமது சகோதரர்கள் சிறு வயதில் கூட சண்டையிட்டுக் கொண்டதில்லையெனவும் இப்போதும் எந்த சச்சரவுமில்லையெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment