கடற்றொழிலாளர்களுக்கு 'திட்டமிட்ட' உதவிகள்: அமீர் அலி - sonakar.com

Post Top Ad

Sunday, 13 May 2018

கடற்றொழிலாளர்களுக்கு 'திட்டமிட்ட' உதவிகள்: அமீர் அலி


வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில் திட்டமிட்டு செயற்படுத்துவோம் என மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல் வளங்கள் அபிவிருத்தி கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை வரவேற்கும் நிகழ்வும், விருந்துபசாரமும் பொத்தானை கழுவாமடுவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

தற்போது எனக்கு மேலதிகமாக மீன்பிடி நீரியல்வள பிரதியமைச்சும் கிடைத்துள்ளது, கடந்த காலத்தில் பிரதியமைச்சராக இருந்து கொண்டு மக்களுக்கு செய்த பணிகளைப் போன்று தொடர்ந்தும் இப்பணிகளை செய்ய இருக்கின்றேன்.

எதிர்காலத்தில் மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக மட்டக்களப்பு மாவட்டத்திலும், விசேடமாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில் நல்ல முறையில் திட்டமிட்டு அவசரமாக செய்ய வேண்டிய விடயங்கள், திட்டமிட்டு செய்ய வேண்டிய விடயங்களை கருத்தில் கொண்டு நாங்கள் செயற்பட இருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

-அனா

No comments:

Post a comment