தலைவருக்கு விசுவாசமாக இருப்பது 'கடமை': நவின் - sonakar.com

Post Top Ad

Sunday, 6 May 2018

தலைவருக்கு விசுவாசமாக இருப்பது 'கடமை': நவின்


ஐக்கிய தேசியக் கட்சிக்கு இரண்டாம் நிலை தலைவர்களை உருவாக்கியுள்ள ரணில் விக்கிரமசிங்க, சரியான முறையில் கட்சியை வழி நடாத்திச் ரணிலுக்கு விசுவாசமாக இருப்பது கட்சி உறுப்பினர்களின் கடமையென தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவின் திசாநாயக்க.


ஜே.ஆர். ஜயவர்தனவைத் தழுவி கட்சி நடவடிக்கைகளைத்  திட்டமிட்டு செயற்படுத்துவதுடன் அடுத்த தலைமுறைத் தலைவர்களையும் உருவாக்கியுள்ளதாகவும் இந்நிலையில் தலைவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டியது உறுப்பினர்களின் கடமையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சித் தலைமைத்துவம் உறுதியாக இருப்பதாகவும் சிறந்த உப மற்றும் துணைத்தலைவர்களடங்கிய சிறந்த நிர்வாகக் குழு அமைந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment