சவுதி: 85000 வருடங்களுக்கு முந்திய மனித பாதச்சுவடுகள் கண்டுபிடிப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday, 12 May 2018

சவுதி: 85000 வருடங்களுக்கு முந்திய மனித பாதச்சுவடுகள் கண்டுபிடிப்பு!சவுதி அரேபியா, தபுக் பிரதேசத்தில் 85000 வருடங்களுக்கு முந்திய மனித பாதச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது சவுதி அரேபியா.

ஜப்பானில் இடம்பெறும் கண்காட்சியொன்றில் பங்கேற்ற நிலையிலேயே சவுதி முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் முஹம்மத் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சவுதி நிபுணர்களைக் கொண்ட குழுவினர் மேற்கொண்ட ஆராய்விலேயே இது தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் இருந்த வாவியொன்றை அண்டி வாழ்ந்த மனித குழு பற்றிய இக்கண்டுபிடிப்பு மேலும் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment