களனி கங்கை நீர் மட்டம் உயர்வு: மல்வானை உட்பட பல இடங்களில் வெள்ளம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 May 2018

களனி கங்கை நீர் மட்டம் உயர்வு: மல்வானை உட்பட பல இடங்களில் வெள்ளம்!


களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் மல்வானை, ரக்சபான, திதவல்கந்தை, விதானகொட, ஆட்டாமாவத்தை, கண்டியாவலுவ உட்பட்ட பெரும்பாலான சுற்றுப்புறங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கடுவெல நகரிலும், அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிக்கிறது.

இதேவேளை, சில இடங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் விநியோகத் தடை செய்திருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.-Nasmeer 


No comments:

Post a Comment