பதவி தருவதில் தாமதம்; ரவி அதிருப்தி! - sonakar.com

Post Top Ad

Monday, 7 May 2018

பதவி தருவதில் தாமதம்; ரவி அதிருப்தி!


கடந்த வியாழக்கிழமை அமைச்சுப் பொறுப்பேற்பதற்குத் தயாராக இருந்த போதிலும் ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் அதிருப்தியடைந்துள்ளார் ரவி கருணாநாயக்க.


உள்ளூராட்சித் தேர்தலில் தனது தொகுதியில் 100 வீத வெற்றியைக் கண்டதாக தெரிவித்து வரும் ரவி, நம்பிக்கையில்லா பிரேரணையின் போதும் பிரதமரைக் காப்பாறுவதில் பாரிய பங்களிப்பைச் செய்திருந்தார்.

இந்நிலையில், கடந்த வியாழன் அமைச்சுப் பதவி கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வையும் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment