மைத்ரி - ரூஹானி சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 13 May 2018

மைத்ரி - ரூஹானி சந்திப்பு!


இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் அடிப்படையில் ஈரான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கு அந்நாட்டின் தலைவர் ஹசன் ரூஹானியை நேரில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.ஈரானைத் தனிமைப்படுத்த அமெரிக்கா பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் தெற்காசிய நாடுகளுடனான உறவை வளர்த்துக்கொள்வதில் ஈரான் அக்கறை செலுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்தியா அமெரிக்கா ஆதரவு நிலையைக் கடைப்பிடிக்கும் சாத்தியம் நிலவுக்னிற அதேவேளை சீனா - ரஷ்யா ஈரானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளமையும் சீன ஆதிக்கம் அதிகம் உள்ள இலங்கையும் அதே நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment