பௌத்த 'இடங்களை' பாதுகாக்க புதிய சட்டம்: விஜேதாச - sonakar.com

Post Top Ad

Sunday 20 May 2018

பௌத்த 'இடங்களை' பாதுகாக்க புதிய சட்டம்: விஜேதாச


பௌத்த சமய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் புராதன தளங்களைப் பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் உயர்கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் விஜேதாச ராஜபக்ச.


நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக பதவி வகித்த காலத்திலும் பௌத்த சமய விவகாரங்களிலேயே கூடிய கவனம் செலுத்தி வந்த விஜேதாச, தற்போது கலாச்சார அமைச்சூடாக தனது ஈடுபாட்டை அதிகரித்து வருகிறார்.

அண்மையில் அநுராதபுரத்தில் பௌத்த புராதன தளமொன்று வீடமைப்பு அதிகார சபையினால் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தையும் கையிலெடுத்துள்ள அவர் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஜேதாச நீதியமைச்சராக இருந்த காலத்தில் பொது பல சேனா ஒரு சுற்று இனவாதத்தை அரங்கேற்றியிருந்தமையும் விசேட பொலிஸ் படையணிகளை நியமித்தும் ஞானசாரவை கைது செய்ய முடியாமல் போயிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment