பொன்சேகாவின் அமைச்சுப் பொறுப்புக்கு 'சிக்கல்' - sonakar.com

Post Top Ad

Tuesday 8 May 2018

பொன்சேகாவின் அமைச்சுப் பொறுப்புக்கு 'சிக்கல்'


அண்மைய அமைச்சரவை மறுசீரமைப்பின் பின் பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்டுள்ள பொன்சேகாவின் அமைச்சுப் பொறுப்புகள் தொடர்பில் அரசுக்குள் அதிருப்தி நிலவுகிறது.


இந்நிலையில், பொறுப்புகள் தொடர்பிலான சுற்றுநிருபத்தில் சரத் பொன்சேகாவின் அமைச்சுப் பொறுப்புகளை உள்ளடக்குவதை தவிர்ப்பதற்கான முயற்சிகளும் இடம்பெறுவதாக அறியமுடிகிறது.

மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வரும் பொன்சேகா பதவி நீக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment