யாரை ஆதரிப்பது? குரூப் 16 தீர்மானிக்கவில்லை: டிலான்! - sonakar.com

Post Top Ad

Monday, 14 May 2018

யாரை ஆதரிப்பது? குரூப் 16 தீர்மானிக்கவில்லை: டிலான்!


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் குரூப 16 உறுப்பினர்கள் மைத்ரி, மஹிந்த, கோத்தா அல்லது பசில் ஆகியோரில் யாரை ஆதரிப்பது என இன்னும் தீர்மானிக்கவில்லையென தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் மஹிந்த ராஜபக்சவே திரும்பவும் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர். எனினும் 19ம் திருத்தச் சட்டத்துக்கு அமைய அதற்கான சாத்தியக்கூறு இல்லாததால் கோத்தபாயவின் பெயர் முன்னிலையில் இருக்கிறது. ஆயினும், அவரும் அமெரிக்க பிரஜாவுரிமை உள்ள நபர் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், சில சிரேஷ்ட சு.க உறுப்பினர்கள் இவ்விவகாரத்தை பேசு பொருளாக்கி வருகின்ற அதேவேளை, குரூப் 16 இன்னும் இது தொடர்பில் தீர்மானிக்கவில்லையென தெரிவிக்கிறார் டிலான்.

2020ல் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் எனவும் ரணிலே ஜனாதிபதியெனவும் அக்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment