மீண்டும் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை: 48 மணி நேர வேலை நிறுத்தம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 May 2018

மீண்டும் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை: 48 மணி நேர வேலை நிறுத்தம்!


ரயில்வே தொழிநுட்ப ஊழியர்களின் தொழிற்சங்கம் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளது.இன்று மாலை 4 மணி முதல் 31ம் திகதி மாலை 4 மணி வரை இவ்வாறு வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

ஏனைய ஊழியர்களின் சம்பள உயர்வு பக்க சார்ப்பானதெனவும் தொழிநுட்ப ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தெரிவித்தே இவ்வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment