சமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும்: வாசு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 May 2018

சமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும்: வாசு!


கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்ச குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினரான சமல் ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார் வாசுதேவ நாநாயக்கார.


மஹிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் கோத்தபாய ராஜபக்சவை முன்நிறுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், கோத்தபாயவும் முஸ்லிம்களையும் சந்தித்து, தமது ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் பீதியின்றி வாழலாம் என தெரிவித்து வருகிறார்.

எனினும், சமல் ராஜபக்சவே பொருத்தமானவர் என வாசுதேவ தெரிவிக்கின்றமையும் கூட்டு எதிர்க்கட்சி ராஜபக்ச குடும்பத்தின் பலத்தை நம்பியே இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment