26 மில்லியன் பெறுமதியான தங்கக் கடத்தல் முறியடிப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday, 19 May 2018

26 மில்லியன் பெறுமதியான தங்கக் கடத்தல் முறியடிப்பு!


கட்டுநாயக்க விமான நிலையமூடாக 26 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தைக் கடத்த முயன்ற இந்தியப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.


சென்னையிலிருந்து இன்று காலை 8.45 அளவில் கொழும்பு வந்த விமானத்திலேயே குறித்த நபர் பயணித்திருந்ததாகவும் தனது உடலைச் சுற்றி தங்கத்தை மறைத்து வைத்து கடத்த முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர் சென்னையைச் சேர்ந்த 54 வயது நபர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment