இல்லாத நிலத்துக்கு பணம் பெற்ற ஜனாதிபதி செயலக பிரதானி! - sonakar.com

Post Top Ad

Saturday, 19 May 2018

இல்லாத நிலத்துக்கு பணம் பெற்ற ஜனாதிபதி செயலக பிரதானி!


கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்தின் போது சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்காக வழங்கப்பட்ட இழப்பீட்டினைப் பயன்படுத்தி இல்லாத நிலத்துக்கு தனது பெயரிலும் முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானி ஐ.கே. மகநாம பெருந்தொகைப் பணம் பெற்றுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.இந்திய வர்த்தகரிடம் 54 கோடி ரூபா லஞ்சப் பேரம் நடாத்தி, 20 கோடியாகக் குறைத்து, அதில் 2 கோடி ரூபா முற்பணம் பெறுகையில் குறித்த நபரும் முன்னாள் அரச மரக்கூட்டுத்தாபன தலைவரான திசாநாயக்கவும் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே மகநாமவின் இம்மோசடி குறித்து தகவல் வெளியாகியுள்ளதுடன் கடவத்தையில் உள்ள வேறு ஒருவரின் காணியைக் காட்டி ஓரிரு தினங்களுக்குள் இவ்வாறு இழப்பீடு பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment