நான்கு மணி நேர சுற்றிவளைப்பில் 2051 பேரைக் கைது செய்த பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Saturday, 12 May 2018

நான்கு மணி நேர சுற்றிவளைப்பில் 2051 பேரைக் கைது செய்த பொலிஸ்!


நான்கு விசேட படையணிகளைக் களமிறக்கி பல நாட்களாகத் தேடியம் ஞானசாரவைக் கண்டுபிடிக்க முடியாமல் போன ஸ்ரீலங்கா பொலிஸ், நான்கே மணித்தியால சுற்றி வளைப்பில்  2051 பேரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.நேற்றிரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரையான காலப்பகுதியிலேயே இக்கைதுகள் இடம்பெற்றிருப்பதாகவும் பொலிஸ் மா அதிபரின் நேரடி உத்தரவின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள.

இதனடிப்படையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 1329 பேர், குற்றச்செயல்களின் பின்னணியிலான சந்தேக நபர்கள் 151 பேர், வேறு சந்தேக நபர்கள் 571 பேர் என பாரிய அளவில் கைதுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment