தெல்தெனியவில் STF குவிப்பு; திகனயில் கண்ணீர்ப் புகை பிரயோகம்! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

தெல்தெனியவில் STF குவிப்பு; திகனயில் கண்ணீர்ப் புகை பிரயோகம்!


திகன பிரதேசத்தில் மீண்டும் பதற்ற நிலை தோன்றியுள்ளதுடன் ஆங்காங்கு கல்வீச்சு உட்பட வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் தெல்தெனியவில் மேலதிக விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


மரண ஊர்வலத்தை சாதமாகப் பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது  பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகமும் மேற்கொண்டுள்ள அதேவேளை பல இடங்களில் தாக்குதல் அச்சம் தொடர்கிறது.


சமூகவலைத்தளங்கள் ஊடாக பெருமளவு வதந்தி பரவுவதும் இதற்கு ஒரு காரணம் என்பதோடு முஸ்லிம்கள் வெளிச்செல்வதைத் தவிர்த்து அமைதி காக்கும்படி சமூகப் பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment