அம்பாறை சம்பவம்: இஸ்லாமிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பு (OIC) கவலை! - sonakar.com

Post Top Ad

Friday, 2 March 2018

அம்பாறை சம்பவம்: இஸ்லாமிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பு (OIC) கவலை!அம்பாறையில் இடம்பெற்ற முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் மற்றும் பள்ளிவாசல் மீதான தாக்குதல் விடயத்தில் கவலை வெளியிட்டுள்ள இஸ்லாமிய நாடுகளுக்கான கூட்டுறவு அமைப்பு இலங்கை அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் உரிமைகளைக் காப்பதிலும் இவ்வாறான இனவிரோத நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.


இலங்கையின் அபிவிருத்தியில் அரபு நாடுகள் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்ற போதிலும் இது தொடர்பில் அரச, மற்றும் சிங்கள ஊடகங்கள் போதியளவு தகவல்களை வெளியிடுவதில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Mahibal M. Fassy said...

The OIC must become the global Islamic Qilafa and restore justice on earth.

Post a Comment