ஜேர்மனியில் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன்! - sonakar.com

Post Top Ad

Friday, 2 March 2018

ஜேர்மனியில் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன்!


லண்டனிலிருந்து நேற்றிரவு கொழும்பு நோக்கி புறப்பட்டிருந்த UL504 ஸ்ரீலங்கன் விமானம் மருத்துவ அவசரத்தின் நிமித்தம் ஜேர்மனி, பிரங்போர்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

பயணி ஒருவரின் மருத்துவ அவசரத்தின் நிமித்தமே இவ்வாறு விமானம் திசை திருப்பப்பட்டுள்ள அதேவேளை இன்று காலை நேர ஒதுக்கீட்டின் பின் மீண்டும் விமானம் பயணத்தைத் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய இராச்சியத்தில் கடும் பனி வீழ்ச்சி நிலவுகின்றதோடு விமான மற்றும் தரைவழி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளமையும் உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய அளவு பனி வீழ்ச்சி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment