அலோசியஸ் - பாலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 2 March 2018

அலோசியஸ் - பாலிசேனவின் விளக்கமறியல் நீடிப்புவங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் கைதான பர்பச்சுவல் டிரசரிஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கோட்டை மஜிஸ்திரேட் லங்கா ஜயரத்ன இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளதன் பின்னணியில் குறித்த இருவரும் மார்ச் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தின் பின்னணியில் கடந்த பெப்ரவரி மாதம் 04ம் திகதி இருவரும் கைது செய்யப்பட்டிருந்தமையும் இவ்விடயத்தில் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் தலைமறைவாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment