இனவாதிகளின் FB பக்கங்கள்; அரசின் கண்டுபிடிப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 11 March 2018

இனவாதிகளின் FB பக்கங்கள்; அரசின் கண்டுபிடிப்பு!


இனவாதத்தையும் வெறுப்புணர்வையும் வளர்க்கும் வகையில் செயற்படும் 80 பேஸ்புக் பக்கங்கள், கணக்குகள் ஒரே இடத்திலிருந்து இயக்கப் படுவதாக தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.

அதே இனவாதம், அதே பேச்சு, அதே வெறுப்புணர்வுடன் தாராளமாக ஒரே நபர் காணொளிகளை வெளியிட்டு வந்த நிலையில் அது தொடர்பில் எதையும் அறிந்து கொள்ள விரும்பாத அரசு தற்போது இவ்வாறு தெரிவிக்கின்றது.


தற்போது தொடரும் இனவெறி தாக்குதல்களால் இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்போவதாகவும் ராஜித மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment