தலைவர்கள் முழு மௌனம்; மீண்டும் அசிங்கப்பட்டு நிற்கும் முஸ்லிம் 'அரசியல்'! - sonakar.com

Post Top Ad

Monday 5 March 2018

தலைவர்கள் முழு மௌனம்; மீண்டும் அசிங்கப்பட்டு நிற்கும் முஸ்லிம் 'அரசியல்'!



இனவாத சம்பவங்கள் ஆங்காங்கு இடம்பெற்றதும் அதற்குத் தாம் ஜனாதிபதியுடன் பேசியதாகவும் பிரதமருடன் பேசியதாகவும் இரவோடிரவாக அறிக்கை விடும் முஸ்லிம் தலைவர்கள் திகன விவகாரத்தில் எதையும் பேசவோ செய்யவோ முடியாத கையாலாகத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


கடந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் கண்டி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்குள் புகுந்த முஸ்லிம் பெயர் தாங்கிக் கட்சிகள் இரண்டும் முஸ்லிம் என்ற அடிப்படையில் வாக்குகளை மாத்திரமன்றி மக்களையும் பிரித்துக் காட்டியமை தவறென பல்வேறு மட்டத்தில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.



வட-கிழக்கின் அரசியல் நிலை போன்றன்று நாட்டின் ஏனைய பகுதிகளில் முஸ்லிம்கள் சிறு சிறு ஊர்கள் மற்றும் குழுக்களாக நாடெங்கிலும் பரந்து வாழ்கின்றனர். இந்நிலையில், இனவாத அடிப்படையிலான அரசியலைக் கொண்டு செல்வதன் மூலம் மேலும் பிரிவினைகள் உருவாகும் என அவதானிகள் தொடர்ச்சியாக எச்சரித்து வந்த நிலையில் அம்பாறையை அடுத்து திகன பகுதியிலும் தனிப்பட்ட பிரச்சினை இனவிரோத வன்முறையாக உருவெடுத்துள்ளது.

அறிக்கை அமைச்சர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காது பொலிசார் துரிதமாக இயங்கியிருந்த நிலையில்  இன்று காலையிலேயே தமக்கிருக்கும் சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று படம் எடுக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனினும், இதையும் தவிர்த்துக் கொள்வதன் மூலம் குறித்த பிரதேசங்களில் வாழும் இன ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்காமல் இருக்க முடியும் எனவும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அல்லாஹ்வுக்காக அமைச்சர்களும் அவர்களது அல்லக்கைகளும் முகப்புத்தகம் ஊடாக தீ மூட்டாமல் இருப்பது நல்லது.

-அ.நவாஸ்

No comments:

Post a Comment