சண்டைக்காரன் காலில் விழுந்த ரணில்; ரங்கே பண்டாரவுடன் சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

சண்டைக்காரன் காலில் விழுந்த ரணில்; ரங்கே பண்டாரவுடன் சந்திப்பு!


உள்ளூராட்சித் தேர்தல் தோல்வியையடுத்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவரப்போவதாக தெரிவித்திருந்த ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.


பாலித ரங்கே பண்டார இவ்வாறு அறிவித்ததும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்திருந்ததுடன் கையொப்ப வேட்டையிலும் இறங்கியிருந்தது.


எனினும், தனது அதிருப்தியாளர்களை தனித்தனியாக சந்தித்து ரணில் பேச்சுவார்த்தை நடாத்தி வரும் நிலையில் நம்பிககையில்லா பிரேரணை தொடர்பான சூடு தணிந்து வருவதாகவும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment