தொடரும் இனவாத வன்முறை: தென்பகுதிக்கும் பரவும் அச்சம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

தொடரும் இனவாத வன்முறை: தென்பகுதிக்கும் பரவும் அச்சம்!


மத்திய மாகாணத்தில் ஊரடங்கு, அவசர கால சட்டங்களையெல்லாம் மீறி கடுமையான இனவாத வன்முறை அரங்கேற்றப்பட்டு வரும் நிலையில் தென்பகுதியிலும் அச்சம் பரவி வருகிறது.

கேகாலை மாவட்டத்தில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்றுள்ள அதேவேளை நீர்கொழும்பு முதல் காலி வரை பல்வேறு பகுதியில் வாழும் மக்கள் தற்சமயம் வட்ஸ்அப், வைபர் போன்ற துரித தகவல் பரிமாற்றத்தளங்கள் ஊடாகப் பரவி வரும் இன்னோரென்ன செய்திகளால் இவ்வாறு அச்ச சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு பரவும் செய்திகள் போலியானவையாகவும் திரித்துக் கூறுபவையாகவும் இருக்கின்ற அதேவேளை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறி வரும் நிலையில் இயற்கையாகவே அச்சம் பரவுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும், தற்சமயம் மத்திய மாகாணத்துக்கு மேலதிக அதிரடிப்படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment