திகன: கைதானவர்களை விடுவிக்கக் கோரி பொலிசுக்கு அழுத்தம்! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

திகன: கைதானவர்களை விடுவிக்கக் கோரி பொலிசுக்கு அழுத்தம்!


நேற்றிரவு இன வன்முறையைத் தூண்டும் வகையில் நடந்து கொள்ள முயன்ற 11 பேரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்த நிலையில் பொலிசாருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று  காலை தெல்தெனிய பொலிஸ் முன்னால் பெருமளவு பிரதேசவசிகள் ஒன்று கூடியுள்ளனர்.


இதன் போது மட்டக்களப்பிலிருந்து அம்பிட்டியே சுமனரத்ன தேரரும் கலந்து கொண்டுள்ளதுடன் இறுதிச் சடங்குகளிலும் அவர் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


முஸ்லிம் இளைஞர்களின் தாக்குதலின் பின்னணியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிங்கள வாலிபன் உயிரிழந்ததன் பின்னணியில் திகன பிரதேசத்தில் பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment