
திகன பிரதேசத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலையில் இறந்த வாலிபரின் மரண ஊர்வலம் திகனயில் இடம்பெறுவதற்கு பொலிசார் தடை விதித்துள்ளனர்.
மெதமஹநுவர, அம்பல பகுதியைச் சேர்ந்த எம்.ஜி. குமாரசிங்க என அறியப்படும் வாலிபரே உயிரிழந்துள்ள நிலையில் நேற்றைய தினம் பிரதேசத்தில் ஆங்காங்கு வன்முறை முயற்சிகள் இடம்பெற்றிருந்தன.
இரு வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டிருந்த நிலையில் துரிதமாக செயற்பட்ட பொலிசார் பாதுகாப்பைப் பலப்படுத்தி அமைதியை நிலைநாட்டியுள்ளனர். இந்நிலையில் மேலதிக பதற்றத்தைத் தடுக்கும் வகையில் இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment