திகன: பாதுகாப்பையும் மீறி உடுதும்பறயில் கல்வீச்சு! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

திகன: பாதுகாப்பையும் மீறி உடுதும்பறயில் கல்வீச்சு!திகன சம்பவத்தின் பின்னணியில் நேற்றிரவிலிருந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் தற்போது உடுதும்பறை பகுதியில் பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் குறித்து பிரதேசவாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்த சிங்கள வாலிபரின் மரண ஊர்வலத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள இனவாத சக்திகளும் இதில் இணைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும், பதற்றத்தை அரசியல் மட்டத்தில் தணிப்பதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவோ முஸ்லிம் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் யாரும் தலை காட்டவோ இல்லாத நிலையில் இவ்வாறு தாக்குதல் சம்பவங்களும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment