சட்டத்தை அமுல்படுத்துவதிலேயே 'முறை கேடு': ரவுப் ஹக்கீம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

சட்டத்தை அமுல்படுத்துவதிலேயே 'முறை கேடு': ரவுப் ஹக்கீம்


சட்ட, ஒழுங்கும் அதனை நடைமுறைப்படுத்துவதும் இரு வேறு விடயங்கள் என விளக்கமளித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், சட்டத்தை அமுல் படுத்துவதிலேயே முறைகேடு இடம்பெறுவதாக நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.


சட்ட விதிகள் முறையாக இருக்கின்ற போதிலும் அவற்றை அமுல்படுத்தச் செல்லும் இடங்களில் எங்கோ தவறு நேர்வதாகவும் இதன் விளைவையே அம்பாறை மற்றும் கண்டியில் மக்கள் காண்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதன் பின்னணியில் யாருடையதோ தலை  (பதவி) உருள வேண்டிய தேவையிருப்பதாகவும் மக்கள் நம்பிக்கையிழந்திருக்கின்ற நிலையில் திடமான நடவடிக்கை அவசியம் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment