திகன இன வன்முறையில் 1983 'சுவடுகள்': சபையில் விமல்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

திகன இன வன்முறையில் 1983 'சுவடுகள்': சபையில் விமல்!


ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருக்கும் போது இன வன்முறைகள் எவ்வாறு கட்டவிழ்த்து விடப்படும் என்பது பரகசியம் என தெரிவித்துள்ள விமல் வீரவன்ச, தற்போதைய சூழ்நிலையில் 1983ல் கட்டவிழ்த்து விடப்பட்ட அதே சுவடுகளைக் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.


1983 முதல் யாழ் நூலக எரிப்பு வரை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருக்கும் போது எவ்வாறு பொலிசாரின் கைகள் கட்டப்பட்டு வன்முறைகள் அரங்கேற்றப்பட்டதோ அதே போன்றே திகனயிலும் பிரச்சினைகள் வரப்போகிறது எனத் தெரிந்தும் பொலிசார் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


பல இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் முன்னிலையிலேயே எரியூட்டல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment