வன்முறைகள் மேலும் தொடரும்; அமெரிக்கா எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 March 2018

வன்முறைகள் மேலும் தொடரும்; அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கையில் இடம்பெற்று வரும் இனவிரோத வன்முறைகள் மேலும் சில நாட்களுக்கு தொடரும் என எச்சரித்துள்ளது அமெரிக்க ராஜாங்க திணைக்களம்.

இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவசரகால சட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என கொழும்பு அமெரிக்க தூதரகம் மறு புறத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.


ஆயிரக்கணக்கில் படையினரை அனுப்பி வருவதாக கதையளந்து வரும் அரசாங்கம் இன்று டி.ஐ.ஜிக்கள் மற்றும் எஸ்.பி.க்கள் அடங்கிய புதிய பொலிஸ் குழு கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நான்கு விசேட பொலிஸ் அணிகளைக் களமிறக்கியும் ஞானசாரவை கண்டுபிடிக்க முடியாது பொலிசார் மன்னிப்புக் கோரியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment