பரிதவிக்கும் முஸ்லிம் சமூகம்; டெலிபோன் 'அமைச்சர்கள்' உறக்கம்! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

பரிதவிக்கும் முஸ்லிம் சமூகம்; டெலிபோன் 'அமைச்சர்கள்' உறக்கம்!திகன பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பையும் மீறி வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தம்மைத் தாமே முஸ்லிம்களின் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் அரசியல் தலைவர்கள் உறங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


வழமையாக ஆங்காங்கு இடம்பெறும் சிறு சம்பவங்களுக்கு தாமே பொலிஸ் மா அதிபரை முதலில் தொடர்பு கொண்டதாக வெற்று வேட்டு அறிக்கைகளை வெளியிடும் ரிசாத் பதியுதீன், ரவுப் ஹக்கீம் குழுவினரும் எங்கு ஆரம்பிப்பதென்று தெரியாமல் முடங்கிப் போயுள்ள நிலையில் உலமாக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சமாதான முயற்சிகளும் பலனளிக்காது முஸ்லிம்கள் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.பிரச்சினை வளர்வதற்கு முன்பாகவே இதனை சமூக மட்டத்தில் தீர்த்துக் கொள்வதற்கான காத்திரமான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படாமையை சாதகமாக்கிக் கொண்ட பிரபல இனவாதிகள் குழுக்கள் தற்போது திகன பகுதிகளில் நிலை கொண்டுள்ள நிலையில் உடுதும்பறை, கங்கெல்ல பகுதிகளில் எரியூட்டல், கல்வீச்சு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், முஸ்லிம்கள் தமது பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தாமகவே சிந்தித்து சூழ்நிலைக்கேற்ப சுயமாக இயங்குமாறு பிரதேச முக்கியஸ்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

-N.Ahmed

No comments:

Post a Comment