தற்காப்புக்கும் தடை; முஸ்லிம்களை விரட்டும் பாதுகாப்பு படை! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

தற்காப்புக்கும் தடை; முஸ்லிம்களை விரட்டும் பாதுகாப்பு படை!திகன பகுதியில் தோன்றியிருக்கும் வன்முறை சூழ்நிலையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே பாதுகாப்புப் படையினர் இருக்கின்றதனால் சுற்றியுள்ள பிரதேசங்களில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள போதிலும் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் முஸ்லிம்களையே விரட்டி வருவதாகவும் வன்முறையாளர்கள் சுதந்திரமாக நடமாடுவதாகவும் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வன்முறைச் சூழலையடுத்து கண்டி மாவட்டத்தில் நாளை காலை 6 மணி வரை ஊடரங்கு அமுலுக்கு வந்துள்ளது. எனினும், திகன உட்பட முக்கிய இடங்களில் வன்முறையாளர்களின் வாகனங்கள் உலவுவதோடு ஆங்காங்கு கல்வீச்சு, அச்றுறுத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முஸ்லிம் அரசியல் தலைமைகளின் வெற்று வேட்டு நிலை அம்பலமாகியுள்ள நிலையில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதேச மக்கள் முயல்கின்ற போதிலும் பாதுகாப்புப் படையினர் தம்மை விரட்டி வருவதாகவும் இதனால் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment