அம்பாறைக்கு இரு விசேட பொலிஸ் குழுக்கள்: அசாத் சாலி! - sonakar.com

Post Top Ad

Friday, 2 March 2018

அம்பாறைக்கு இரு விசேட பொலிஸ் குழுக்கள்: அசாத் சாலி!


அம்பாறையில் திங்களிரவு இடம்பெற்ற இனவிரோத செயற்பாடு தொடர்பில் விசாரணை நடாத்த கொழும்பிலிருந்து இரு விசேட பொலிஸ் குழுக்கள் பிரதமர் உத்தரவில் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் தேசிய ஐக்கிய முனினணி தலைவர் அசாத் சாலி.


குறித்த சம்பவத்தை துரிதமாக ஆராய்ந்து அதன் பின்னணியில் இருந்த குழுவினர் மற்றும் முஸ்லிம்கள் உணவில் வேறு பொருட்களை கலப்பதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்வோர் தொடர்பிலும் இக்குழு விசாரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, அரசாங்க அதிபர் மற்றும் பொலிசார் இவ்விடயத்தைக் கையாண்ட விதத்தினையும் துரிதமாக விசாரித்து பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் இம்முறை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கயெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அமைச்சர் ராஜித சோரத்னவும் இணைந்து சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமரிடம் உரையாடியதாகவும் அசாத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment