பிரச்சினை 'அரசியலாகி' விட்டது; அவதானமாக கையாள்கிறோம்: ரணில் - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

பிரச்சினை 'அரசியலாகி' விட்டது; அவதானமாக கையாள்கிறோம்: ரணில்


திகன பகுதியில் ஆரம்பித்த முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறை 'அரசியலாகி' விட்டதாகவும் அதனால் சூழ்நிலையை மிகவும் அவதானமாகக் கையாள்வதாகவும் தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.


நேற்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆளும்கட்சிக் கூட்டத்தில் வைத்தே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திகன பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறையினால் அப்துல் பாஸித் எனும் முஸ்லிம் இளைஞன் எரியூட்டப்பட்ட வீட்டினுள் சிக்கி ஷஹீதாக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அப்பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.


எனினும், தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அச்ச சூழ்நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment