கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்தீபு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்தீபு!


நாட்டில் இடம்பெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறைகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்காது தவிர்த்து வரும் நிலையில் கொழும்பில் இதனை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த ஆயத்தங்கள் நிகழ்ந்து வருகிறது.


திகனயில் முஸ்லிம் இளைஞன் அப்துல் பாசித் ஷஹீதாகியுள்ள அதேவேளை பல பள்ளிவாசல்கள் கட்டிடங்கள், வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், நேற்றிரவு பிரதமர் இல்லத்தின் முன் இடம்பெற்ற சிறு கவனயீர்ப்பு நிகழ்வினைத் தொடர்ந்து மதியம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment