தெல்தெனியவில் கைதானவர்களுக்கு 19ம் திகதி வரை விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

தெல்தெனியவில் கைதானவர்களுக்கு 19ம் திகதி வரை விளக்கமறியல்


தெல்தெனியவில் இனவிரோத மற்றும் வன்செயல்களில் ஈடுபட முனைந்த குற்றச்சாட்டுகளில் நேற்று முன் தினமிரவு கைது செய்யப்பட்ட 24 பேரையும் எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

குறித்த கைது நடவடிக்கைகள் தவிர அதற்கடுத்து இடம்பெற்ற பெரும்பாலான பொலிசாரின் அடக்கு முறை முஸ்லிம்களுக்கு எதிராகவே இருந்துள்ளதுடன் பல இடங்களில் முஸ்லிம்கள் கைகளிலும் பொல்லுகள் வழங்கப்பட்டு வன்முறைக்கு இரு தரப்பும் காரணம் என சித்தரிக்க முயற்சி இடம்பெற்றுள்ளது.


பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதனால் இனவாதிகள் தமது தாக்குதல்களை சுதந்திரமாகத் தொடர்ந்ததுடன் தொடர்ந்தும் பிரதேசத்தில் அச்ச சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment