பௌத்தனாக 'வெட்கப்படுகிறேன்' என்கிறார் கிரியல்ல! - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

பௌத்தனாக 'வெட்கப்படுகிறேன்' என்கிறார் கிரியல்ல!


கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பௌத்தனாக தான் வெட்கப்படுவதாகவும் பிரதேசத்தின் அரசியல் பிரதிநிதி எனும் அடிப்படையில் வெட்கப்படுவதாகவும் தெரிவிக்கிறார் லக்ஷ்மன் கிரியல்ல.

சம்பவம் தொடர்பில் புலனாய்வுத்துறை முறையாகப் பணியாற்றத் தவறி விட்டதாகவும் இருப்பினும் வந்தவர்களுள் பெரும்பாலானோர் வெளியூர்க்காரர்கள் எனவும் அவர்களின் செயலை கைதட்டி ஆர்ப்பரித்து ரசிப்பவர்கள் நாடாளுமன்றுக்குள்ளும் இருப்பதாகவும் கிரியல்ல தனது நாடாளுமன்ற உரையின் போது மேலும் தெரிவித்திருந்தார்.இதேவேளை, கைதானவர்களை விடுவிக்க டிபென்டர்களில் அலைபவர்கள் யார் என்பதை நாடறியும் எனவும் தான் தனிப்பட்ட ரீதியில் மன்னிப்பு கோர விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகத்கது.

4 comments: