திகன விவகாரம்: கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டம் ஒத்தி வைப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

திகன விவகாரம்: கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டம் ஒத்தி வைப்பு


திகன உட்பட மத்திய மாகாணத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நாளைய தினம் நுகேகொடயில் ஏற்பாடாகியிருந்த கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் நாமல் ராஜபக்ச.

பல்வேறு இடங்களில் கலவர சூழ்நிலை உருவாகியுள்ள அதேவேளை பெரும்பாலான அரசியல்வாதிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இவ்விடயம் மஹிந்த அணியினால் அரசியலாக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கும் ரணில் விக்கிரமசிங்க தாம் அவதானமாகக் கையாள்வதாகத் தெரிவிக்கிறார்.


இந்நிலையில், சம்பவங்களைக் கண்டிப்பதைத் தவிர்த்த வரும் மஹிந்த ராஜபக்ச தரப்பு கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment