10 நாட்களுக்கு அவசர கால சட்டத்தை அறிவிக்க முஸ்தீபு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

10 நாட்களுக்கு அவசர கால சட்டத்தை அறிவிக்க முஸ்தீபு!அம்பாறையைத் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேற்றப்பட்டு உயிர்ப்பலியும் எடுக்கப்பட்டுள்ள நிலையில் 10 நாட்களுக்கு அவசர கால சட்டத்தை அறிவிக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் எஸ்.பி. திசாநாயக்க.

முஸ்லிம் இளைஞர்கள் சிலரால் தாக்குதலுக்குள்ளான சிங்கள வாலிபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார். எனினும், இம்மரணத்திற்கும் சம்பவத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தற்போது சந்தேகம் வெளியிடப்பட்டு வருகிறது.


பொலிசில் முறைப்பாடொன்றை மேற்கொண்டு விட்டே வைத்தியசாலையில் அனுமதி பெற்ற குறித்த நபர் ஒரு வாரத்தின் பின் உயிரிழந்ததற்கான வேறு காரணங்கள் இருக்குமா என்பது தொடர்பிலும் சந்தேகம் வெளியிடப்பட்டு வரும் நிலையில் கையாலாகாத நிலையில் இருக்கும் அரச நிர்வாகம் அவசர கால சட்டத்தை அறிவிக்க ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment