வன்முறைகளுக்கு 'பௌத்தர்களை' குற்றஞ்சாட்ட முடியாது: சோபித தேரர்! - sonakar.com

Post Top Ad

Sunday, 11 March 2018

வன்முறைகளுக்கு 'பௌத்தர்களை' குற்றஞ்சாட்ட முடியாது: சோபித தேரர்!


தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பௌத்தர்களை குற்றஞ்சாட்ட முடியாது என தெரிவித்துள்ளார் ஒமல்பே சோபித தேரர்.

இச்சம்பவங்கள் நிமித்தம் பௌத்தர்கள் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என அண்மையில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல நாடாளுமன்றில் வைத்து தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்குமுகமாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் இடம்பெற்று வரும் வன்முறைச் செயல்கள் எவ்விதத்திலும் 'பௌத்தர்களால்' திட்டமிடப்படவில்லையெனவும் இவ்வாறான தீவிரவாத செயலை பௌத்தம் ஆதரிக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, பெரும்பாலான இடங்களில் விகாரைகளில் ஒன்று கூடியே வன்முறையாளர்கள் தமது தாக்குதல் திட்டங்களைத் தீட்டியதாகவும் தாக்குதல்களின் பின்னரும் திரும்பிச் சென்றதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் விகாராதிபதிகள் எதிர்க்க முடியாத சூழலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

Nazeer China Ibrahim said...

So, what about Batticaloa thera and BBS Thera....
They r not in Buddhism..?

Post a Comment