வன்முறைக்கு ஒரு மணி நேரம் 'அவகாசம்' கொடுத்த பொலிஸ்: ஹலீம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 11 March 2018

வன்முறைக்கு ஒரு மணி நேரம் 'அவகாசம்' கொடுத்த பொலிஸ்: ஹலீம்!


ஒரு மணி நேரம் தருகிறோம், அடித்து விட்டு ஓடி விடுங்கள் என தீவிரவாதிகளுக்கு பொலிசாரே கால அவகாசம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார் அமைச்சர் ஹலீம்.

நேற்றைய தினம் பிரதமர் கண்டிக்கு விஜயம் செய்திருந்த நிலையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்தே அமைச்சர் ஹலீம் இத்தகவலை வெளியிட்டதோடு குறித்த தீவிரவாத அமைப்பு தொடர்பில் தாம் பல காலமாக பொலிசாருக்கு அறிவுறுத்தி வந்த போதிலும் பொலிசார் அலட்சியமாக செயற்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.எனினும், சகல பொலிஸ் அதிகாரிகளையும் அவ்வாறு குற்றஞ்சாட்ட முடியாது என அமைச்சர் ஹக்கீம் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment