மேலதிக படையினர் தேவை; திணறும் பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

மேலதிக படையினர் தேவை; திணறும் பொலிஸ்!


மெனிக்ஹின்ன, தென்னகும்பற மற்றும் மத்திய மாகாணத்தின் மேலும் சில பகுதிகளுக்கு வன்முறைகள் பரவி வரும் நிலையில் தமக்கு மேலதிக படையினர் அவசியப்படுவதாக கொழும்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.

ஜனாதிபதி அலுவலகத்துக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ள அதேவேளை, விசேட அதிரடிப்படையினர் ஆயிரம் பேரையாவது உடனடியாக வன்முறை இடம்பெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கும்படி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.


அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வன்முறைத் தாக்குதல்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment